/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேக்கரி இயந்திரம், விருந்தோம்பல் உணவு பொருள் கண்காட்சி துவக்கம்
/
பேக்கரி இயந்திரம், விருந்தோம்பல் உணவு பொருள் கண்காட்சி துவக்கம்
பேக்கரி இயந்திரம், விருந்தோம்பல் உணவு பொருள் கண்காட்சி துவக்கம்
பேக்கரி இயந்திரம், விருந்தோம்பல் உணவு பொருள் கண்காட்சி துவக்கம்
ADDED : ஜூலை 03, 2024 09:59 PM

கோவை : கோவை அவிநாசி ரோட்டில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் சினர்ஜி எக்ஸ்போஸ் சார்பில் உணவு, சேவை விருந்தோம்பல் கண்காட்சி நேற்று துவங்கியது.
காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. மதியம் 2:00 மணி வரை வணிகர்களும், அதன் பின் மாலை 6:00 மணி வரை, பொதுமக்களும் பார்வையிடலாம்.
கண்காட்சியில், பேக்கரி தொழில்நுட்பம், விருந்து தயார் செய்ய உதவும் பெரிய இயந்திரங்கள், பேக்கரி பொருட்கள் தயாரிப்பு இயந்திரங்கள், உணவை அழகாக மாற்றித்தரும் இயந்திரங்கள், உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
குளிர்பானங்கள் தயாரிப்பு, உணவு தொழிற்சாலைகள், தங்கும் விடுதிகள், மாணவர் விடுதிகள், விருந்து விழாக்கள், உள்ளிட்டவைகளுக்கு உணவு தயாரிக்கும் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பேக்கரி கருவிகள், புதிய வகை குளிர்பானங்கள், மசாலாக்கள், இன்ஸ்டன்ட் ஆக ஒரு பேக்கரியை உருவாக்க ரெடிமேட் கடைகள், எளிய முறை பந்தல்கள் காட்சிக்கு உள்ளன.
சிற்றுண்டி தயாரிக்கும் தொழில் தொடங்குவோருக்கு, பல்வேறு இயந்திரங்கள், பொருட்களை பற்றி அறிய, ஒரு வாய்ப்பாக கண்காட்சி அமைந்துள்ளது. கண்காட்சி நாளை நிறைவு பெறுகிறது.