/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் திருவிழாவுக்கு செல்ல தடை
/
கோவில் திருவிழாவுக்கு செல்ல தடை
ADDED : மார் 07, 2025 10:33 PM

வால்பாறை; காடம்பாறை அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள சென்ற பக்தர்களை, வனத்துறையினர் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறை அடுத்துள்ளது காடம்பாறை. இங்குள்ள வெள்ளிமுடி செட்டில்மென்ட் பகுதியில் உள்ள வனதேவதை கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன் தினம், விழாவில் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்ள வால்பாறையிலிருந்து, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றனர். இவர்களை காடம்பாறை நுழைவுவாயிலில் வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
கோவிலுக்கு செல்லக்கூடாது எனக்கூறி, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் தெரிவித்ததால், பக்தர்கள் சோதனைச்சாவடி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற வால்பாறை பா.ஜ., மண்டல் தலைவர் பாலாஜி, பொதுசெயலாளர்கள் செந்தில்முருகன், சுனில் ஆகியோர், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாபிரியா மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் பேசினர்.
இதனிடையே, அந்த வழியாக வந்த பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி சம்பவம் குறித்து கேட்டறிந்து, வனத்துறை உயர்அதிகாரிகளிடம் பேச்சு நடத்தியதையடுத்து, பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பின், பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர்.