ADDED : செப் 07, 2024 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, வாழைப்பழம் விலை உயர்ந்துள்ளது.
வாழைப்பழ வியாபாரிகள் கூறுகையில், 'ஏற்கனவே அதிகரித்து காணப்பட்ட, வழைப்பழம் விலை, விநாயகர் சதுர்த்தியால் மேலும் உயர்ந்துள்ளது. 12 பழங்கள் கொண்ட ஒரு சீப் பூவன்பழம், 100 முதல் 120 ரூபாய் வரை விற்கிறோம். செவ்வாழைப்பழம் கிலோ 120 ரூபாய்க்கும், மோரீஸ் வாழைப்பழம் கிலோ 80 ரூபாய்க்கும் விற்கிறோம்' என்றனர்.