/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழை வரத்து குறைந்தது; விலையிலும் மாற்றம்
/
வாழை வரத்து குறைந்தது; விலையிலும் மாற்றம்
ADDED : ஏப் 07, 2024 09:09 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், வாழை வரத்து குறைந்துள்ளது என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு உடனுக்குடன் காய்கள் விற்பனை ஆவதால், விவசாயிகள் இதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
மார்க்கெட்டில், தற்போது வாழை வரத்து மற்றும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், நேற்று, செவ்வாழை (கிலோ ) 40 - 50; நேந்திரன் 15 - 20; சாம்பிராணி வகை, 30 -- 35; ரஸ்தாளி வகை 30 - -40 ; பூவன் - 25, கதளி - 25 ரூபாய்க்கு விலை போனது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது: வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வாழை வரத்து குறைந்துள்ளது. மேலும், நேந்திரன் வகை வாழையால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
விளைச்சல் சராசரியாக இருந்தாலும், வெயிலின் தாக்கத்தால் சில வாழைகள் வாடியுள்ளது. இதனால் வரத்து குறைத்து காணப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்தனர்.

