/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசிடம் இருந்து தப்ப முயன்ற வாலிபர் காலில் கட்டு
/
போலீசிடம் இருந்து தப்ப முயன்ற வாலிபர் காலில் கட்டு
போலீசிடம் இருந்து தப்ப முயன்ற வாலிபர் காலில் கட்டு
போலீசிடம் இருந்து தப்ப முயன்ற வாலிபர் காலில் கட்டு
ADDED : செப் 06, 2024 03:06 AM
கோவை;போலீசிடம் இருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்ததில் விபசார வழக்கு குற்றவாளிக்கு கால் முறிந்தது.
காந்திரபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட துடியலுாரை சேர்ந்த ராஜம், 36, சத்யா, 34 ஆகியோரை காட்டூர் போலீசார் கைது செய்தனர். சிக்கந்தர் பாஷா, ஸ்டீபன் ஆகியோரை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்டீபன், 30 இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் பிடிக்க சென்ற போது ஸ்டீபன் காரில் தப்பி சென்றார். போலீசார் துரத்திச் சென்றனர். ஸ்டீபன் ராஜ், 30 காந்திபுரத்தில் இருந்து சரவணம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த போது போலீசார் சுற்றிவளைத்தனர். போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயன்ற அவர் கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. போலீசார் கீழே விழுந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஸ்டீபன் ராஜ் தனது நண்பர் சிக்கந்தர் பாஷாவுடன் சேர்ந்து ரஷ்யா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெண்களை கோவைக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், இதன் மூலம் மாதம் சுமார் 50 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாகவும், அந்த பணத்தில் ரவுடிகளுக்கு பங்கு கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.