/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி வழித்தடத்தில் சோதனை ஓட்டம்
/
பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி வழித்தடத்தில் சோதனை ஓட்டம்
பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி வழித்தடத்தில் சோதனை ஓட்டம்
பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி வழித்தடத்தில் சோதனை ஓட்டம்
ADDED : ஏப் 19, 2024 12:20 AM

பொள்ளாச்சி;பெங்களூரு - கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயில் பொள்ளாச்சி வழியாக சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை மற்றும் பழநி பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான தனியார் துறை வல்லுநர்கள் (குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள்) பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பணியாற்றுகின்றனர்.
இவர்கள், பொள்ளாச்சி, உடுமலை, பழநியில் இருந்து பெங்களூருக்கு, குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒரு முறையாவது பயணம் செய்கின்றனர். ஏராளமான வர்த்தகர்கள், வணிகர்களும் வணிக காரணங்களுக்காக பெங்களூருக்கு செல்கின்றனர்.
எனவே, கோவை - உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை (22665/22666) (கிணத்துக்கடவு வழியாக) பொள்ளாச்சி, பழநி வரை நீட்டிக்க வேண்டும், என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலக்காடு கோட்ட ரயில்வே அதிகாரிகள், உதய் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க தொழில்நுட்பம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஆய்வு செய்து சென்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி வழித்தடத்தில் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
நேற்று முன்தினம், காலை, 8:00 மணிக்கு கோவையில் இருந்து, இரண்டு ஏ.சி., பெட்டிகள் உள்ளிட்ட நான்கு பெட்டிகளுடன் கிளம்பிய உதய் டபுள் டெக்கர் ரயில், போத்தனுார், கிணத்துக்கடவு வழியாக, காலை, 9:00 மணிக்கு பொள்ளாச்சி வந்தடைந்தது.
பொள்ளாச்சியில் இருந்து இன்ஜின் மாற்றப்பட்டு, 9:25 மணிக்கு கிளம்பி, ஆனைமலை ரோடு - மீனாட்சிபுரம் வழியாக, பகல், 11:00 மணிக்கு பாலக்காடு சென்றடைந்தது. ரயில் மீண்டும், 11:30 மணிக்கு கிளம்பி, பொள்ளாச்சி வழியாக மறு திசையிலும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ரயில், 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டது.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'பெங்களூரு உதய் எக்ஸ்பிரஸ், பொள்ளாச்சி வழியாக இயக்க சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தண்டவாளத்தின் உறுதி தன்மை, 'டபுள் டெக்கர்' ரயில் செல்வதற்கான வசதிகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது,' என்றனர்.

