/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வார்டுகளில் வங்கி கணக்கு துவக்கம்
/
வார்டுகளில் வங்கி கணக்கு துவக்கம்
ADDED : செப் 02, 2024 01:49 AM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் நகராட்சியில், 18வது வார்டில், பாரத் ஸ்டேட் வங்கியின் சார்பில், வங்கி கணக்கு துவக்கும் முகாம் நடந்தது.
மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன.18 வது வார்டில் பாரத ஸ்டேட் வங்கி கிளை, பாரத் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் சேவை மையம் ஆகியவை இணைந்து, சிறுசேமிப்பு வங்கி கணக்கு துவக்கும் முகாம் இரண்டு நாட்கள் நடந்தன.
மேட்டுப்பாளையம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் வனிதா நடராஜன் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் முகாமை துவக்கி வைத்தார். கோவை பாரத ஸ்டேட் வங்கி மண்டல அலுவலக மேலாளர் நடராஜன், வங்கி கணக்கை துவக்கி வைத்து பேசியதாவது:
முகாமில் எளிய முறையில் குறைவான கட்டணத்தில், வங்கி கணக்கு துவங்கலாம். மத்திய, மாநில அரசுகளின் மானியம் மற்றும் நிதி உதவி பெற, வங்கிக் கணக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். பத்து வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் சுகன்யா சம்ரித் திட்டம் (செல்வமகள் திட்டம்) வாயிலாக வங்கி கணக்கு துவங்கிக் கொள்ளலாம். இதனால் இந்த முகாமை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு மேலாளர் பேசினார்.
பாரத் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி முனியப்பன் வரவேற்றார். முகாமில், 160க்கும் மேற்பட்டவர்கள் வங்கி கணக்கை துவக்கினர்.