/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் முகாம்
/
சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் முகாம்
சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் முகாம்
சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் முகாம்
ADDED : செப் 05, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அனைத்து வேலை நாட்களிலும் காலை, 10:30 மணியில் இருந்து மாலை, 5:00 மணி வரை நடைபெறும்.
ஏற்கனவே விண்ணப்பித்து கடன் கிடைக்காத வியாபாரிகள், முதல் மற்றும் இரண்டாவது தவணைகளில் கடன் பெற்று முறையாக திருப்பிச் செலுத்திய வியாபாரிகள் தங்களது சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயனடையலாம் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.