/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
26 கிலோ நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளர் வாழ்க்கை ஆடம்பரம் கேரள போலீசார் தகவல்
/
26 கிலோ நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளர் வாழ்க்கை ஆடம்பரம் கேரள போலீசார் தகவல்
26 கிலோ நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளர் வாழ்க்கை ஆடம்பரம் கேரள போலீசார் தகவல்
26 கிலோ நகைகளுடன் தலைமறைவான வங்கி மேலாளர் வாழ்க்கை ஆடம்பரம் கேரள போலீசார் தகவல்
ADDED : ஆக 22, 2024 02:17 AM

பாலக்காடு : கேரள மாநிலத்தில், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, வடகரை எடோடி கிளையின் முன்னாள் மேலாளர் மதா ஜெயக்குமார், ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மதா ஜெயக்குமார், 34. இவர், கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரை எடோடி பகுதி, 'பாங்க் ஆப் மகாராஷ்டிரா'வில் மேலாளராக பணிபுரிந்தார். இவர், இரண்டு மாதங்களில், 42 வாடிக்கையாளர்கள் அடகு வைத்த, 17 கோடி ரூபாய் மதிப்புள்ள, 26 கிலோ தங்க நகைகளுடன் மதா ஜெயக்குமார் தலைமறைவானதும், அந்த நகைகளுக்கு பதில், போலி நகைகளை லாக்கரில் வைத்ததும் உயர் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது.
வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில், கர்நாடகா-, தெலுங்கானா எல்லையான பீதர் மாவட்டத்திலிருந்து இவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளது தெரியவந்தது.
வடகரை போலீசார் கூறியதாவது:
கேரள போலீசார் தேடி வந்த மதா ஜெயக்குமார், ஆதார் அடையாள அட்டை இல்லாமல் புதிய சிம் கார்டு பெற முயற்சித்த போது, தெலுங்கானா போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், கேரள போலீசாரால் தேடப்படும் நபர் என்பது அவர்களுக்கு தெரிந்தது. இத்தகவல் கிடைத்தும் கேரள போலீசார் தெலுங்கானா சென்று மதா ஜெயக்குமாரை கைது செய்தோம்.
போலீஸ் தேடுவது அறிந்து தலைமறைவாகி சொகுசு காரில் சென்ற இவரது மனைவியும், நண்பரையும் பிடித்து விசாரித்து வருகிறோம். ஓலை குடிசையில் தங்கி வந்திருந்த மதா ஜெயக்குமார், தற்போது 'லிப்ட்' வசதி உள்ள மூன்று மாடி வீட்டில் வசிக்கிறார். ஏராளமான சொகுசு கார்கள் இவர் பெயரில் உள்ளன. தமிழகம் உட்பட பல பகுதிகளில் இவருக்கு பிளாட் மற்றும் நிலம் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவரது மனைவியின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளை முடக்கியது மட்டுமல்லாமல் டெபிட், கிரெடிட் கார்டுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை பயன்படுத்தி என்ன செய்தாலும் அந்த தகவல் போலீசாருக்கு கிடைக்கும் தீவிர விசாரணை நடக்கிறது.
இவ்வாறு, போலீசார் கூறினர்.