/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனியன் பொருள் ஜி.எஸ்.டி., காங்., எதிர்ப்பு
/
பனியன் பொருள் ஜி.எஸ்.டி., காங்., எதிர்ப்பு
ADDED : டிச 09, 2024 06:31 AM

அன்னுார் : காங்., அகில இந்திய செயலாளர் கோபிநாத் அன்னூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசியலுக்கு வருகிறவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்., ஆகிவிட முடியாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். உதயநிதி கட்சி பொறுப்பில் இருந்து எம்.எல்.ஏ.,வாகி அதன் பிறகு துணை முதல்வர் ஆகியுள்ளார்.
பனியன் பொருட்களுக்கு தற்போதுள்ள 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,க்கு பதிலாக, 28 சதவீதம் வசூலிக்க ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே, ஜவுளி பனியன் தொழில் நசிந்துள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நசிந்து வருகின்றன. ஜி.எஸ்.டி., அதிகரித்தால் பல லட்சம் பேர் வேலை இழப்பர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.