/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வக்கீல் சங்க விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
/
வக்கீல் சங்க விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
ADDED : மார் 05, 2025 10:52 PM
கோவை:
வக்கீல் சங்கம் சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கோவை வக்கீல் சங்கம் சார்பில், வக்கீல்களுக்கான விளையாட்டு போட்டிகள் இரண்டு மாதங்களாக பல்வேறு மைதானங்களில் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, வக்கீல் சங்க அரங்கில் நடந்தது.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, 167 வக்கீல்கள் முதல் பரிசு பெற்றனர். இரண்டாவது இடத்தை, 141 வக்கீல்களும், மூன்றாவது இடத்தை, 75 வக்கீல்களும் பிடித்தனர்.
55- வயதுக்கு மேற்பட்டோருக்கு நடந்த, பல்வேறு விளையாட்டு போட்டியில் பங்கேற்ற, 70 வயதான வக்கீல் ராஜாராம், முதல் பரிசு பெற்றார்.
விழாவில், ஓய்வு பெற்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆறுமுகசாமி, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா ஆகியோர், பரிசுகோப்பைகள் வழங்கினர்.
வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில், வக்கீல்கள் சங்க செயலாளர் சுதீஷ், துணை தலைவர் சிவஞானம், பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.