/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏப்.,1 முதல் நடைமுறைக்கு வருகிறது மதுபாட்டில்களில் 'பார்கோடு' ஸ்கேன்
/
ஏப்.,1 முதல் நடைமுறைக்கு வருகிறது மதுபாட்டில்களில் 'பார்கோடு' ஸ்கேன்
ஏப்.,1 முதல் நடைமுறைக்கு வருகிறது மதுபாட்டில்களில் 'பார்கோடு' ஸ்கேன்
ஏப்.,1 முதல் நடைமுறைக்கு வருகிறது மதுபாட்டில்களில் 'பார்கோடு' ஸ்கேன்
ADDED : மார் 02, 2025 04:57 AM

கோவை : கோவையில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில், சில்லறை விற்பனையில் பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதை தடுக்க, 'பார்கோடு' ஸ்கேன் செய்யும் நடைமுறை ஏப்., 1 முதல் அமலுக்கு வருகிறது.
வடக்கு மாவட்டத்தில் செயல்படும், 'டாஸ்மாக்' கடை மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடத்தப்பட்டது. எதற்காக இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது; இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன, எவ்வாறு ஸ்கேன் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக விளக்கப்பட்டது.
'டாஸ்மாக்' அதிகாரிகள் கூறியதாவது:
அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதலாக வசூலிக்கக் கூடாது என்பதால் 'பார்கோடு' ஸ்கேன் நடைமுறை வருகிறது. மதுபான தொழிற்சாலைகளில் இருந்து கிடங்கிற்கு வரும் மதுபானங்கள், எந்தெந்த கடைகளுக்கு அனுப்பப்பட்டன என்கிற விபரம், கம்ப்யூட்டரில் பதிவாகி இருக்கும்.
பார்கோடு ஸ்கேன் செய்த பிறகே, மதுபாட்டில்களை விற்க முடியும். விற்பனை செய்த பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும். என்னென்ன மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன; எத்தனை பாட்டில்கள் இருப்பில் இருக்கின்றன என்பதை அலுவலகத்தில் இருந்து அறிந்து, தேவையான சப்ளை அனுப்ப முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.