/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழக்கு போடாமல் இருக்க பேரம் எஸ்.ஐ., -- எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
/
வழக்கு போடாமல் இருக்க பேரம் எஸ்.ஐ., -- எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
வழக்கு போடாமல் இருக்க பேரம் எஸ்.ஐ., -- எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
வழக்கு போடாமல் இருக்க பேரம் எஸ்.ஐ., -- எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
ADDED : ஜூலை 12, 2024 10:59 PM
கோவை:கோவையில், வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க புகாருக்கு ஆளானவரிடம் பேரம் பேசிய, எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ. ஆகியோர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
கோவை, கோவைபுதுாரைச் சேர்ந்தவர் ஜான்சன், 36; சுண்டக்காமுத்துார் பகுதி ஜெ., பேரவையின் முன்னாள் செயலர். இவர், வாகனங்களை வாங்கிக்கொண்டு, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
அவ்வாறு வாகனத்தை வைத்து பணம் பெறுவோர், மீண்டும் வாகனத்தை திரும்ப எடுக்கும் போது, தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர் மீது சிலர் போலீசில் புகார் செய்ததால், சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுபோல ஒருவர் இவர் மீது குனியமுத்துார் போலீசில் புகார் செய்துள்ளார். அதுகுறித்து எஸ்.ஐ., மணிகண்டன், எஸ்.எஸ்.ஐ., அகஸ்டின் ஆகியோர் ஜான்சனிடம் பேசியுள்ளனர்.
அப்போது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 50,000 ரூபாய் தர வேண்டும்' என, கூறியுள்ளனர். இதனை பதிவு செய்த ஜான்சன் வெளியே பரப்பியுள்ளார்,
இந்த ஆடியோ பதிவு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கும் சென்றது. உதவி கமிஷனர் அஜய் தங்கத்திடம் விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் பேரம் பேசியது உறுதியானது. கமிஷனருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, எஸ்.ஐ., மணிகண்டன், எஸ்.எஸ்.ஐ., அகஸ்டின் ஆகியோரை கமிஷனர், 10ம் தேதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
எஸ்.ஐ., மணிகண்டன், 2021ம் ஆண்டு நேரடி எஸ்.ஐ.,யாக பணியில் சேர்ந்தவர். ஓராண்டாக இங்கு பணிபுரிந்து வருகிறார். அதுபோல எஸ்.எஸ்.ஐ., அகஸ்டின், 52, 1996ம் ஆண்டு இரண்டாவது பேட்சில் பணியில் சேர்ந்துள்ளார். ஒன்றரை ஆண்டுகளாக இங்கு பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகாருக்கு ஆளானவரிடம் பேரம் பேசியதற்காக, இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

