/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விவசாய விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதார விலை தேவை'
/
'விவசாய விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதார விலை தேவை'
'விவசாய விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதார விலை தேவை'
'விவசாய விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதார விலை தேவை'
ADDED : ஜூலை 06, 2024 02:23 AM

பொள்ளாச்சி;'விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை தடை செய்யக்கூடாது,' என, நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொள்ளாச்சியில், நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில், தியாகிகள் தின கோரிக்கை மாநாடு நடந்தது. மாநில தலைவர் பாபு தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் முருகானந்த கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பொள்ளாச்சி வட்டார தலைவர் மாரிமுத்து வரவேற்றார். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன், 'உயிர் விவசாய உற்பத்தி நிறுவனம்' தலைவர் தெய்வசிகாமணி மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். கூட்டத்தில், மாவட்ட, வட்டார நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தமிழக அரசு கள்ளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதார விலை கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரத்தை தடை செய்யக்கூடாது.
தென்னக நதிநீர் இணைப்பை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
விவசாயிகள், விவசாய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது. தமிழகத்தில் உள்ள தினசரி மற்றும் வார சந்தைகளில், விவசாயிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.