/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
' டி.என்.ஏ., கைரேகை அடிப்படைகள்' ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி
/
' டி.என்.ஏ., கைரேகை அடிப்படைகள்' ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி
' டி.என்.ஏ., கைரேகை அடிப்படைகள்' ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி
' டி.என்.ஏ., கைரேகை அடிப்படைகள்' ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : மே 09, 2024 04:12 AM
கோவை, : தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மையத்தின் , தாவர உயிரி தொழில்நுட்ப துறையில், 'டி.என்.ஏ., கைரேகை அடிப்படைகள்' என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகம் மற்றும் மஹாராட்டிரா கல்வி நிறுவனங்களை சேர்ந்த, 17 ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர். பயிற்சியை சி.பி.எம்.பி., இயக்குனர் செந்தில் தலைமை வகித்து துவக்கிவைத்தார். இதில், மூலக்கூறு அடிப்படைகள், டி.என்.ஏ., கைரேகை பயன்பாடுகள், டி.என்.ஏ., பிரித்தெடுத்தல் நெறிமுறைகள், கலப்பின அடையாளம், தாவர வகை கைரேகைக்கான பி.சி.ஆர்., நுட்பங்கள், குறித்து நிபுணர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், மரபணு வேறுபாடு பகுப்பாய்விற்காக என்.டி.எஸ்., ஒய்.எஸ்., மென்பொருள் இயக்க பயிற்சியை மாணவர்கள் பெற்றனர். இதில், துறை நிபுணர்கள், பல்கலை விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.