/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களுக்கான கூடைப்பந்து; கோப்பை வென்றவர்கள் விபரம்
/
மாணவர்களுக்கான கூடைப்பந்து; கோப்பை வென்றவர்கள் விபரம்
மாணவர்களுக்கான கூடைப்பந்து; கோப்பை வென்றவர்கள் விபரம்
மாணவர்களுக்கான கூடைப்பந்து; கோப்பை வென்றவர்கள் விபரம்
ADDED : ஆக 03, 2024 09:54 PM

கோவை: மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் சுகுணா, பெர்க்ஸ், ராஜலட்சுமி மில்ஸ் ஆகிய அணிகள் முதலிடம் பிடித்தன.
பெர்க்ஸ் மெட்ரிக்., பள்ளி சார்பில், சிறுவர்களுக்கு 39வது ஆண்டு டாக்டர் ராம ரங்கநாதன் நினைவு மாவட்ட கூடைப்பந்து போட்டி, பள்ளி வளாகத்தில் ஜூலை 29ம் தேதி முதல் ஆக., 2ம் தேதி வரை நடந்தது.
சிறுவர்களுக்கு 13, 14 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதிப்போட்டி முடிவுகள்:
13 வயது பிரிவில் ராஜலட்சுமி மில்ஸ் அணி 49 - 28 என்ற புள்ளிக்கணக்கில் விஷ்வதீப்தி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. 14 வயது பிரிவில் பெர்க்ஸ் பள்ளி அணி, 62 - 34 என்ற புள்ளிக்கணக்கில் பி.எஸ்.ஜி., சர்வஜனா பள்ளியை வீழ்த்தி, கோப்பையை வென்றது.
19 வயது பிரிவில், சுகுணா பிப் பள்ளி அணி 63 - 60 என்ற புள்ளிக்கணக்கில் சபர்பன் பள்ளியை வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றியது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கம், கோப்பை, பதக்கம் பரிசாக வழங்கப்பட்டன.
பரிசுகளை கூடைப்பந்து வீரர் விஜய், பெர்க்ஸ் பள்ளி முன்னாள் மாணவி காயத்திரி ஆகியோர் வழங்கினர்.