/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவானி ஆற்றில் குளித்தால் தண்டனை
/
பவானி ஆற்றில் குளித்தால் தண்டனை
ADDED : மே 03, 2024 01:10 AM

மேட்டுப்பாளையம்;பவானி ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் இறங்கக் கூடாது. மீறி ஆற்றில் இறங்குபவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என, நகராட்சி கமிஷனர் அறிவிப்பு வைத்துள்ளார்.
பவானி ஆற்றில் நீரோட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த தண்ணீரை பம்பிங் செய்து, பொதுமக்களுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் நகரில், ஆற்றின் கரைப்பகுதியில் உள்ள பலர், ஆற்றில் இறங்கி குளித்தும், துணி துவைத்து வருகின்றனர். இதனால் குடிநீர் சுகாதார சீர்கேடு அடைய வாய்ப்புள்ளது.
எனவே பவானி ஆற்றில் யாரும் இறங்கி குளிக்கவும், துணி துவைக்கவும் அல்லது வேறு காரணங்களுக்காகவும் இறங்கக்கூடாது. அதையும் மீறி ஆற்றில் இறங்கினால், அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு நகராட்சி கமிஷனர் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பர பிளக்ஸ் பேனர்களை, மேட்டுப்பாளையம் நகரில் பவானி ஆற்றின் கரையோரம், பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.