/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பயிர்களை பாதுகாக்க தேனீ பெட்டி வைக்கலாம்'
/
'பயிர்களை பாதுகாக்க தேனீ பெட்டி வைக்கலாம்'
ADDED : மே 21, 2024 11:13 PM
மேட்டுப்பாளையம்;பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க தேனீ பெட்டிகளை, விளை நிலத்தில் வைப்பது குறித்து விவசாயிகளுக்கு, வேளாண் மாணவிகள் எடுத்துரைத்தனர்.
பொள்ளாாச்சி வாணவராயர் வேளாண்மை கல்லுாரியின் நான்காம் ஆண்டு மாணவிகளான சஹானா, அஜிதா, தனலெஷ்மி, இனியாள், லதர்ஷ்ணி, தாரணி, சுபப்பிரபா, கார்த்திகா, மவுனிகா, பிரித்திகா ஆகியோர் 'கிராம தங்கல் திட்டத்தின்' ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்தில் தங்கி விளை நிலங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
காரமடை அருகே தாயனுார், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளை மாணவிகள் சந்தித்தனர். பின், பயிர்களை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க தேனீ பெட்டிகளை, விளை நிலத்தில் வைப்பது குறித்து எடுத்துரைத்தனர்.
பின், தென்னை மரத்தை சுற்றியுள்ள களைகளை அகற்றி, தென்னை மட்டையை மரத்தின் வேர் பகுதிகளில் சுற்றி அமைத்து மல்ச்சிங் எனப்படும் முறையை செய்து காட்டினர். மல்ச்சிங்கால் தண்ணீர் தேவையை குறைக்கலாம், களை செடிகள் வளர்வதை தடுக்கலாம் என விவசாயிகளிடம் மாணவிகள் தெரிவித்தனர்.

