/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேனீ வளர்ப்பு, நீர்ம உயிர் உரங்கள்: வேளாண் மாணவர்கள் விளக்கம்
/
தேனீ வளர்ப்பு, நீர்ம உயிர் உரங்கள்: வேளாண் மாணவர்கள் விளக்கம்
தேனீ வளர்ப்பு, நீர்ம உயிர் உரங்கள்: வேளாண் மாணவர்கள் விளக்கம்
தேனீ வளர்ப்பு, நீர்ம உயிர் உரங்கள்: வேளாண் மாணவர்கள் விளக்கம்
ADDED : மே 23, 2024 11:15 PM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே வேளாண் மாணவர்கள், நீர்ம உயிர் உரங்கள், தேனீ வளர்ப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
தேனீ வளர்ப்பு தொழில் இன்று பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதன் வாயிலாக, இதை வளர்ப்போருக்கு சிறந்த வருமானமும் கிடைத்து வருகிறது. இதனை மாநில அரசும், வேளாண்துறையும் ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே தேனி வேளாண் கல்லுாரி மாணவர்கள், கப்பளாங்கரை, நல்லட்டிபாளையம் கிராமங்களில், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதில், விவசாயிகளை நேரடியாக சந்தித்து, வேளாண் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.
கப்பளாங்கரையில் தேனீ வளர்ப்பு முறைகள் குறித்தும்; என்ன பயன்கள் என்பது குறித்தும் விவசாயிகளிடம் விளக்கினர். இதையடுத்து, நல்லட்டிபாளையத்தில், உயிர் உரங்கள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
நீர்ம உயிர் உரங்கள் பயன்படுத்துவதால், அதிகமான வீரிய ஆயுட்காலம், அதிகமான எண்ணிக்கையில் உயிரணுக்கள் உள்ளன. தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது; மணிச்சத்து எளிதில் கிடைக்கச் செய்கிறது.
ரசாயன உரங்களின் தேவையை குறைக்கலாம். இயற்கை வேளாண்மைக்கு உகந்தது, விளைச்சலை அதிகரிக்கிறது என விளக்கம்அளித்தனர்.