/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழங்குடியினருக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
/
பழங்குடியினருக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
ADDED : செப் 01, 2024 11:03 PM
கோவை;கோவை வேளாண் பல்கலையில், பூச்சியியல் துறை மற்றும் இந்திய எண்ணெய் நிறுவனம் சார்பில், பழங்குடி மக்களுக்கான தேனீ வளர்ப்பு பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பூச்சியியல் துறை பேராசிரியர் சாமிநாதன், இந்திய தேனீ கூடுகளை ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தை விளக்கினார். தேனீக்களின் இனங்கள், வகைகள், கூடுகளின் அமைப்பு, தேனீக்களின் இயக்க முறை, பருவகால மேலாண்மை, கூடுகளை ஒருங்கிணைத்தல், தேன் எடுத்தல் குறித்து விளக்கினார்.
இணை பேராசிரியர் பிரீத்தா, தேனீ வளர்ப்பு உபகரணங்களைப் பயன்படுத்தும் முறை, தேனீக்களுக்கு உணவுப் பற்றாக்குறை காலங்களில் செயற்கை உணவு வழங்குதல் குறித்து விளக்கினார்.
பழங்குடி மக்கள், பல்கலை பேராசிரியர்கள், தேனீ வளர்ப்போர் பங்கேற்றனர்.