/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டில் 43 சவரன் நகை திருட்டு பீளமேடு போலீசார் விசாரணை
/
வீட்டில் 43 சவரன் நகை திருட்டு பீளமேடு போலீசார் விசாரணை
வீட்டில் 43 சவரன் நகை திருட்டு பீளமேடு போலீசார் விசாரணை
வீட்டில் 43 சவரன் நகை திருட்டு பீளமேடு போலீசார் விசாரணை
ADDED : ஆக 06, 2024 07:08 AM
கோவை: கோவை சேரன்மாநகரில் வீட்டின் பூட்டை உடைந்து, 43 சவரன் நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணம் திருடிய நபரை, போலீசார் தேடுகின்றனர்.
கோவை, பீளமேடு அடுத்து சேரன்மாநகரை சேர்ந்தவர் மோனிஸ் ராஜன்,27. இவர்தனது தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் தயாரிப்பு கம்பெனி வைத்துள்ளார்.
கடந்த, 3ம் தேதி காலை 10:00 மணிக்கு இவர் தனது தாயுடன், வீட்டை பூட்டிவிட்டு தாராபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். மாலை 6:00 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. படுக்கை அறை அலமாரியில் இருந்த, 43 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருட்டு போயிருந்தது. பீளமேடு போலீசில் மோனிஸ் ராஜன் அளித்த புகாரின்படி, விசாரணை நடந்துவருகிறது.