/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாகுபடிக்கு கைகொடுக்கும் கோடைமழை எதிர்பார்ப்பில் பீட்ரூட் சாகுபடியாளர்கள்
/
சாகுபடிக்கு கைகொடுக்கும் கோடைமழை எதிர்பார்ப்பில் பீட்ரூட் சாகுபடியாளர்கள்
சாகுபடிக்கு கைகொடுக்கும் கோடைமழை எதிர்பார்ப்பில் பீட்ரூட் சாகுபடியாளர்கள்
சாகுபடிக்கு கைகொடுக்கும் கோடைமழை எதிர்பார்ப்பில் பீட்ரூட் சாகுபடியாளர்கள்
ADDED : மே 16, 2024 06:48 AM

உடுமலை : கோடை மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், நடப்பு சீசனில், உடுமலை வட்டாரத்தில், பரவலாக பீட்ரூட் சாகுபடி செய்துள்ளனர்.
உடுமலை மற்றும்குடிமங்கலம் வட்டாரத்தில்,கணபதிபாளையம், ராகல்பாவி, வெனசப்பட்டி, கொங்கல்நகரம், மொடக்குபட்டி, விருகல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, ஆண்டு முழுவதும் பீட்ரூட் சாகுபடி மேற்கொள்கின்றனர்.
களிமண் சாகுபடி பரப்புள்ள பகுதிகளில், இந்த சாகுபடியில், நல்ல மகசூல் கிடைத்து வந்தது. ஏக்கருக்கு, 2 கிலோ விதைகளை நடவுக்கு பயன்படுத்துகின்றனர். சீதோஷ்ண நிலை மாற்றத்தால், ஏற்படும் நோய்த்தாக்குதலுக்கு, 3 முறை மருந்து தெளிக்கின்றனர்.
கடந்த சீசனில், அதிக வெயில் மற்றும் மழை இல்லாததால், சாகுபடியில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு, மகசூல் குறைந்தது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததால், கிணறு மற்றும் போர்வெல்களில், தண்ணீர் இல்லாமல், குறைவான பரப்பளவிலேயே பீட்ரூட் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தற்போது கோடை மழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில், பீட்ரூட் விதைகள் நடவு செய்து செடிகள் வளர்ச்சி தருணத்தில் உள்ளன.
விவசாயிகள் கூறியதாவது: பீட்ரூட் சாகுபடியில், ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. நல்ல சீதோஷ்ண நிலை இருந்தால், ஏக்கருக்கு, 12 டன் வரை மகசூல் கிடைக்கும்.
கோடை மழையும் தொடர்ந்து தென்மேற்கு பருவமழையும் பெய்தால், நல்ல மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம். சீசன் சமயங்களில், விதையின் விலை பல மடங்கு உயர்ந்து விடுகிறது.
தோட்டக்கலைத்துறை வாயிலாக மானிய விலையில், விதைகள் வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.