/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய பெங்க ளூரு பெண் கைது
/
மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய பெங்க ளூரு பெண் கைது
மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய பெங்க ளூரு பெண் கைது
மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய பெங்க ளூரு பெண் கைது
ADDED : மே 23, 2024 11:24 PM

ஆனைமலை:மதுரை மாவட்டத்தை சேர்ந்த நாகம்மாள், 65 கடந்த, இரு வாரத்துக்கு முன், கணக்கம்பட்டி கோவிலுக்கு சென்றார்.
அப்போது, அங்கு வந்த பெண் ஒருவர், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாக கூறி அழைத்து சென்றார்.
பின்னர், கோவிலில் இருவரும் இரவு தங்கினர். நாகம்மாள் காலை எழுந்து பார்த்த போது, உடனிருந்த பெண்ணும், நகையும் திருடப்பட்டது தெரிந்தது.
ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, டி.எஸ்.பி., ஸ்ரீநிதி தலைமையில், இன்ஸ்பெக்டர் குமார், எஸ்.ஐ., முருகநாதன், எஸ்.எஸ்.ஐ., ரகுநாத் ஆகியோரைக்கொண்ட தனிப்படையினர், பெங்களூருவை சேர்ந்த வள்ளியை,55, கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது: மதுரையை சேர்ந்த நாகம்மாள், கணக்கம்பட்டி கோவிலுக்கு வந்த போது, பெங்களூருவைச் சேர்ந்த வள்ளி, 55, அறிமுகமாகி, ஈஷா, ஆனைமலை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.ஆனைமலை கோவிலில் தங்கி காலை தரிசனம் செய்யலாம் எனக்கூறிய வள்ளி, நகைகளை பாதுகாப்பாக பேக்கில் வைத்துக்கொள்ள நாகம்மாளிடம் தெரிவித்தார்.
இதை நம்பி அவரும், நகைகளை கழட்டி பேக்கில் வைத்தார்; பின்னர், மயக்க மருந்து கலந்த ஜூைஸ, மூதாட்டிக்கு கொடுத்தார்.
மூதாட்டி மயக்கத்தில் துாங்கிய போது, 12பவுன் நகையுள்ள பேக்கை எடுத்துக்கொண்டு சென்றார். இவர், ஏற்கனவே, ஆனைமலை தர்மராஜா காலனியை சேர்ந்த செல்வி வீட்டில் கடந்தாண்டு மே மாதம் வாடகைக்கு தங்கியவர், ஏழரை பவுன் நகையை திருடிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, 19 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது என்றனர்.