/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரு பெத்த பேரு; வளர்ச்சி இல்லை: மடத்துக்குளத்தில் புலம்பல்
/
பேரு பெத்த பேரு; வளர்ச்சி இல்லை: மடத்துக்குளத்தில் புலம்பல்
பேரு பெத்த பேரு; வளர்ச்சி இல்லை: மடத்துக்குளத்தில் புலம்பல்
பேரு பெத்த பேரு; வளர்ச்சி இல்லை: மடத்துக்குளத்தில் புலம்பல்
ADDED : ஏப் 17, 2024 12:43 AM
தங்கள் பகுதியை சேர்ந்தவர்கள், நான்கு முறை பொள்ளாச்சி தொகுதிக்கான எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டும், வளர்ச்சிப்பணிகள் எதுவும் நடக்காததால், 'பேரு பெத்த பேரு; வளர்ச்சிதான் ஏதுமில்லை' என, மடத்துக்குளம் பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட மடத்துக்குளம் பகுதியில் இருந்து, கே.ஏ.ராஜூ (அ.தி.மு.க.,), கிருஷ்ணன் ம.தி.மு.க., (இரண்டு முறை); சண்முகசுந்தரம் (தி.மு.க.,) எம்.பி., யாக பதவி வகித்துள்ளனர்.
நான்கு முறை இப்பகுதியில் இருந்து எம்.பி., தேர்வு செய்யப்பட்டும், அடிப்படை வளர்ச்சி கூட இல்லை என, மக்கள் புலம்புகின்றனர். மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷன் எவ்வித வசதியும் இல்லாமல் உள்ளது.
கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு, மேம்படுத்தப்படாத ரோடு, அரசு கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லாதது என, வளர்ச்சியில் பின்தங்கியே இப்பகுதி உள்ளது. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையும், உற்பத்தி இல்லாமல் முடங்கியுள்ளது.
விவசாயம் மற்றும் பாசன திட்டங்கள் குறித்த பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.
இம்முறை தி.மு.க., சார்பில், மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்; இவர், மடத்துக்குளம் ஒன்றிய குழு துணைத்தலைவராகவும் பதவி வகித்தார். ஆனால், அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை என்ற புகார் பரவலாக மக்களிடையே உள்ளது.
'நாலு வாட்டி நம்மூருகாரங்க எம்.பி.,யாகியும் ஒன்னும் பண்ணல. உள்ளாட்சி பிரதிநிதியா இருந்தப்ப மக்கள் பிரச்னைகளை கண்டுக்காம, இப்ப வாக்குறுதியை அள்ளி வீசறவங்கல எப்படி நம்பறது' என மக்கள் மாற்றி யோசித்து வருகின்றனர்.
மேலும், 'பேரு பெத்த பேரு; வளர்ச்சிதான் இல்லை' என்ற புலம்பலும் பரவலாக கேட்கிறது.

