ADDED : ஆக 16, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்க, சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு, சுதந்திர தின விழாவில், முதல்வர் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறந்த மாநகராட்சிக்கு 50 லட்சம்; நகராட்சிக்கு 30 லட்சம்; சிறந்த பேரூராட்சிக்கு 20 லட்சம்; சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலத்திற்கு, 30 லட்சம் ரூபாய் வழங்கப்படுகின்றன.
நேற்று சுதந்திர தின விழாவில், கோவை மாநகராட்சிக்கு, சிறந்த மாநகராட்சி விருது; திருவாரூர் நகராட்சிக்கு, சிறந்த நகராட்சி விருது; கோவை மாவட்டம், சூலுார் பேரூராட்சிக்கு, சிறந்த பேரூராட்சி விருது; சென்னை மாநகராட்சி 14வது மண்டலமான பெருங்குடிக்கு, சிறந்த மண்டல விருது வழங்கப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் காசோலையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

