/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதீய வித்யா பவன் பள்ளியில் பாரதியார் விழா
/
பாரதீய வித்யா பவன் பள்ளியில் பாரதியார் விழா
ADDED : ஜூலை 28, 2024 01:04 AM

கோவை;பாரதீய வித்யா பவனின் அஜ்ஜனுார், ஆர்.எஸ்.புரம் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இணைந்து, பாரதியார் விழாவினை, வெகு விமர்சையாகக் கொண்டாடின.
பாரதீய வித்யா பவனின் தலைவர் கிருஷ்ண ராஜ் வாணவராயர் பேசுகையில், ''பாரதியின் வாக்கிற்கேற்ப, மாணவர்கள் உலகெங்கிலும் சென்று உயர்ந்த கல்வியைக் கற்று, பாரத தேசத்திற்குத் தொண்டாற்றும் கடமையை நினைவில் கொள்ள வேண்டும்,'' என்றார்.
பாரதியார் விழா தொடர்பாக, மூன்று பள்ளிகளிலும் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வள்ளிக்கும்மி உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்வுகளை, மாணவர்கள் அரங்கேற்றினர்.
சிறப்புப் பேச்சாளர் மகேஸ்வரி சற்குரு, பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.