/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதி பள்ளி ஆண்டு விளையாட்டு விழா
/
பாரதி பள்ளி ஆண்டு விளையாட்டு விழா
ADDED : ஜூலை 01, 2024 01:38 AM

கோவை;பாரதி பள்ளியின் ஆண்டு விளையாட்டு தின விழா, கடந்த 28, 29 ஆகிய தேதிகளில், கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
போட்டியை, ஏர் ஸ்குவாட்ரன் என்.சி.சி., கமாண்டிங் ஆதிகாரி பர்குனன், கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
விளையாட்டு தின விழாவை முன்னிட்டு மாணவர்கள் டிருத், நோபிள், சாரிட்டி, பீஸ் என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டனர்.
மாணவ - மாணவியருக்கு சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளில், 50மீ., 100மீ., 200மீ., 400மீ., 800மீ., தொடர்ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.
நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் திறம்பட விளையாடி, நோபிள் அணி 485 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது.
சாரிட்டி அணி 481 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தை தட்டிச்சென்றது. மாணவர் பிரிவில் மாதேஷ், தக் ஷரீதன், சஞ்சய், கோகுல் சஞ்சய் மற்றும் மாணவியர் பிரிவில் ஆரண்யா, தன்யஸ்ரீ, சாய் ஜயனி, ஸ்ரீ அனிஷா ஆகியோர், சிறந்த வீரர் - வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டனர். மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம், சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, 4ம் பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி லால்ரேம்ருட்டா ஒய்னம் பரிசுகளை வழங்கினார்.
பரிசளிப்பு விழாவில், பள்ளி தலைவர் ஆனந்த், தாளாளர் சஞ்சீவ், விளையாட்டு கவுன்சிலர் நேகாரிகா, முதல்வர் மேரி நோவலேட் ஆகியோர் உடனிருந்தனர்.