/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
25 ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு தரைப்பாலம் கட்ட பூமி பூஜை
/
25 ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு தரைப்பாலம் கட்ட பூமி பூஜை
25 ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு தரைப்பாலம் கட்ட பூமி பூஜை
25 ஆண்டு கோரிக்கைக்கு தீர்வு தரைப்பாலம் கட்ட பூமி பூஜை
ADDED : ஆக 26, 2024 01:03 AM
கருமத்தம்பட்டி:25 ஆண்டு கால கோரிக்கைக்கை தீர்வு காணப்பட்டதால், கிட்டாம்பாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சியின் வடக்கு பகுதியில் பல தோட்டத்து சாளைகள் உள்ளன. அங்கு வசிக்கும் மக்கள், அவ்வழியே செல்லும் கவுசிகா நதியை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழை நீர் சென்றாலோ, தடுப்பணையில் தண்ணீர் தேங்கி இருந்தாலோ தோட்டத்துக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
அப்பகுதி மக்கள், கடந்த, 25 ஆண்டுகளாக, கலெக்டரிடமும், கிராம சபை கூட்டங்களிலும், கவுசிகா நதியில் பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அக்கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
ஊராட்சி தலைவரின் முயற்சியில், தரைப்பாலம் கட்ட, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டு, பொது நிதியில் இருந்து, 35 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. மேலும், 15, வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், தார் ரோடு போட, 8 லட்சத்து, 86 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகளுக்கான பூமி பூஜை, ஊராட்சி தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., முத்துராஜூ பணிகளை துவக்கி வைத்தார். முன்னாள் தலைவர் ரங்கசாமி, துணைத்தலைவர் சுப்புலட்சுமி, ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

