நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தில் ரோட்டை கடந்த நபர் பைக் மோதி இறந்தார்.
நெகமம், கக்கடவை சேர்ந்தவர் மாரியப்பன், 56. இவர் கோவில்பாளையத்தில் ரோட்டை கடந்தார். அப்போது ரோட்டில் அதிவேகமாக சதீஷ்குமார், 33. என்பவர் ஓட்டி வந்த பைக் மாரியப்பன் மீது மோதியது. இதில், மாரியப்பனுக்கும் சதீஷ்குமாருக்கும் காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே மாரியப்பன் உயிரிழந்தார். மேலும், சதீஸ்குமார் சிகிச்சையில் உள்ளார். இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.