/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூடாக்கு அமைத்தால் பல்லுயிர் பெருகும்
/
மூடாக்கு அமைத்தால் பல்லுயிர் பெருகும்
ADDED : மே 14, 2024 11:31 PM
நெகமம்:கிணத்துக்கடவு மற்றும் நெகமம் பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகம் உள்ளது. தற்போது கோடை காலத்தில் அதிக வெப்பம் நிலவுகிறது. இதனால், தென்னைக்கு போதிய அளவு நீர் இன்றி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, ஜக்கார்பாளையத்தை சேர்ந்த விவசாயி சம்பத்குமார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் கூறுகையில், 'தென்னை விவசாயத்தில் ஊடுபயிர் அவசியம். இதனால், வெயிலின் தாக்கம் மண்ணில் குறைவாக விழும். இதனால் அப்பகுதிகளில் மண் புழு வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தென்னைக்கு மூடாக்கும் அமைப்பதால், மண்ணில் பல்லுயிர் பெருக்கம் அதிகரித்து, மண் புழு வளர உதவுகிறது.
மண்புழுவானது, ஒரு ஏக்கருக்கு, இரண்டு லட்சம் தண்ணீர் சேமிக்கக்கூடிய அளவிற்கு துளைகளை இடுகிறது. இதனால், மழை காலத்தில் இந்த துளைகளில் தண்ணீர் சேர்ந்துவிடும்.
இதனால், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தென்னைக்கு, குறைந்த அளவு தண்ணீர் பாய்ச்சினால் போதுமானதாக இருக்கும். மண் புழு எச்சத்தில், 18 வகையான சத்துக்கள் கிடைப்பதால், தென்னைக்கு நல்ல உரமாக மாறுகிறது,' என்றார்.

