ADDED : ஏப் 24, 2024 10:28 PM
அ நிறம் | அளவு
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், சிறப்பாக, நேர்த்திகடன் செலுத்தும் வகையில், பக்தர்கள் அலகு குத்தி வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அவ்வகையில், கிரேன்களில், தொங்கிய படி, நாக்கு, முதுகு, கால்களில் அலகு குத்தி பறவைக்காவடி எடுத்து வந்து, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
தேர்த்திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியாக பறவைக்காவடி நேர்த்திக்கடன் செலுத்துவதும் சிறப்பு அம்சமாக உள்ளது.
