/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
/
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ADDED : ஜூன் 04, 2024 01:12 AM

கோவை;மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று, அவரது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். அதன்பின், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
ஒட்டுமொத்த தமிழகமும், முன்னாள் முதல்வர் கருணாநிதியை கொண்டாடி வருகிறது. ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும், வெற்றியை மட்டுமே பார்த்தவர். இன்றைய நாளில் அவரை கொண்டாடி வருகிறோம். தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க., வெல்லும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் மகத்தான வளர்ச்சியை, முதல்வர் செய்து காட்டுவார். கோவையில் உள்ள சிறு குறு தொழில்துறைக்கு, விடியல் அடுத்தகட்டமாக காத்திருக்கிறது; இதுவரை கண்டிராத திட்டங்கள் வரும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அப்போது, வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், பொருளாளர் முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.