/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை இன்று கோவையில் பிரசாரம்
/
பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை இன்று கோவையில் பிரசாரம்
ADDED : ஏப் 08, 2024 12:15 AM
கோவை;கோவை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை, இன்று கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பிரசாரம் மேற்கொள்கிறார்.
சரவணம்பட்டி கே.ஜி.பேக்கரி பகுதியில், காலை 7:00 மணிக்கு துவங்கி, விநாயகபுரம், சிவானந்தபுரம், சின்னவேடம்பட்டி, அஞ்சுகம்நகர், உடையாம்பாளையம், சின்னமேட்டுப்பாளையம் வரை பிரசாரம் செய்கிறார். சரவணம்பட்டி சந்திப்பில், முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
மதியம் 3:00 மணிக்கு வெள்ளானைப்பட்டி, கள்ளிப்பாளையம், குரும்பபாளையம், கோவில்பாளையம், கோட்டைப்பாளையம், கீரணத்தம், இடிகரை, அத்திப்பாளையம், வெள்ளமடையில் தேநீர் அருந்துகிறார்.
கஸ்துாரிநாயக்கன்பாளையம், வீரபாண்டிபிரிவு, கோவனுார், நாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம், புதுப்பாளையத்தில் பிரசாரம் செய்த பின், பூச்சியூரில் இரவு 8:00 மணிக்கு நிறைவு செய்கிறார். அங்கு 10:00 மணி வரை முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.

