/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுடில்லியில் வெற்றி பா.ஜ., கொண்டாட்டம்
/
புதுடில்லியில் வெற்றி பா.ஜ., கொண்டாட்டம்
ADDED : பிப் 10, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : புதுடில்லி சட்டபை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, பொள்ளாச்சியில் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
புதுடில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதையடுத்து, பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் அருகே, பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர், நகர பா.ஜ., தலைவர் பரமகுரு தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், மூத்த நிர்வாகி நடராஜ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

