/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முருகனுக்கு ஆதரவாக பா.ஜ., தீவிர பிரசாரம்
/
முருகனுக்கு ஆதரவாக பா.ஜ., தீவிர பிரசாரம்
ADDED : மார் 24, 2024 11:46 PM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு ஆதரவாக பா.ஜ.,வினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் நகராட்சி பகுதிகள் உள்ளன. இது நீலகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்டது. இங்கு தேசிய ஜனநாயக கூட்டணி அலுவலக திறப்பு விழா நடந்தது. இதையொட்டி, 275வது பூத்துக்கு உட்பட்ட பகுதியில் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., பொதுச்செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள், கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றிய பல்வேறு நலத்திட்டங்கள், ஸ்டார்ட் அப் திட்டம், முத்ரா கடன் திட்டம், திறன் மேம்பாட்டு திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் உதவி திட்டம், ஏழை மக்களுக்கு விபத்து காப்பீடு, ஓய்வூதிய திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும், 6 ஆயிரம் ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி, பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில், கூடலூர் மண்டல தலைவர் மகேந்திரன், பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

