தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பா.ஜ.,வினர் விடுதலை

பா.ஜ.,வினர் விடுதலை

பா.ஜ.,வினர் விடுதலை


ADDED : ஜூலை 28, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 28, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத் பற்றி, கேரளத்தில் அவமரியாதை செய்ததை கண்டித்து, குனியமுத்துாரில் 2021, அக்., 29 ல் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் ரமேஷ்குமார் உட்பட 9 பொறுப்பாளர்கள் மீது, கோவை ஜே.எம்:7, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த ஐகோர்ட், 9 பேர் மீதான வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டது.

9 பேரும், ஜே.எம்:7, கோர்ட்டில் நேற்று ஆஜராகி ஐகோர்ட் உத்தரவு நகலை சமர்ப்பித்தனர். இதையடுத்து, ரமேஷ்குமார் உட்பட 9 பேரையும் விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us