/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை; மத்திய இணை அமைச்சர் துவக்கம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை; மத்திய இணை அமைச்சர் துவக்கம்
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை; மத்திய இணை அமைச்சர் துவக்கம்
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை; மத்திய இணை அமைச்சர் துவக்கம்
ADDED : செப் 11, 2024 10:40 PM

மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில், பா.ஜ., உறுப்பினர் சேர்க்கையை, மத்திய இணை அமைச்சர் முருகன் துவக்கி வைத்தார்.
பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்க்கை இயக்கமான, சங்கதன் பர்வா, சதாஸ்யத அபியான் 2024 என்ற திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில், பா.ஜ., உறுப்பினர் சேர்க்கையை, மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் முருகன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், மொபைல் போன் செயலி வாயிலாக, ஆன்லைனில் உறுப்பினர் பதிவு செய்ய வேண்டும். பா.ஜ., நிர்வாகிகள் வீடு வீடாக சென்று, மத்திய அரசின் திட்டங்களை, மக்களிடம் எடுத்துக் கூறி, உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், நீலகிரி தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

