/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு தீவிரம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்ப்பு தீவிரம்
ADDED : செப் 17, 2024 10:30 PM
அன்னுார் : பிரதமர் மோடியின், 74வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என, தமிழக பா.ஜ., தலைமை அறிவுறுத்தியது. அன்னுார் வடக்கு ஒன்றியம் சார்பில், அன்பு நகர், குமாரபாளையம், புதுப்பாளையம் பகுதியில் தீவிர உறுப்பினர் சேர்ப்பு நேற்று நடந்தது.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில், 'கட்சியில் ஒருவர் தீவிர உறுப்பினராக வேண்டும் என்றால், தான் வசிக்கும் ஓட்டு சாவடி பகுதியில், 25 உறுப்பினர்களையும், சட்டசபை தொகுதிக்குள் மேலும் 25 உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும். தீவிர உறுப்பினரானால்தான் பொறுப்புக்கு வர முடியும்' என்றனர். அன்னூர் தெற்கு ஒன்றியத்திலும் தீவிர உறுப்பினர் சேர்ப்பு கணேசபுரத்தில் நடந்தது.