/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., ஆர்ப்பாட்டம்; 95 பேர் கைது
/
பா.ஜ., ஆர்ப்பாட்டம்; 95 பேர் கைது
ADDED : மார் 11, 2025 10:38 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் தி.மு.க.,வினரை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான், தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, தி.மு.க.,வினர், தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சரின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சியில், நகர தி.மு.க., சார்பில், மத்திய அரசை கண்டித்து எருமை மாடுகளின் மீது மத்திய அமைச்சரின் உருவம் இடம் பெற்ற பிளக்ஸ் பேனர்களை தொங்கவிட்டு நுாதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உருவ பொம்மையும் எரித்தனர். இதை போலீசார் தடுக்கவும் இல்லை; யாரையும் கைது செய்யாமல் பாதுகாப்பு கொடுத்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, தி.மு.க.,வினரை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நடந்தது.மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் துரை, கோவிந்தராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன்பாக, பா.ஜ., கட்சியினரை போலீசார் கைது செய்ய முற்பட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.பா.ஜ.,வினரை குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று வாகனங்களில் ஏற்றினர். அப்போது, தமிழக முதல்வர், அமைச்சரை அவமதித்தும், அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 15 பெண்கள் உள்ளிட்ட, 95 பேரை போலீசார் கைது செய்தனர்.