/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூத் சிலிப் அனுப்பும் பா.ஜ.,: கோவை கலெக்டரிடம் புகார்
/
பூத் சிலிப் அனுப்பும் பா.ஜ.,: கோவை கலெக்டரிடம் புகார்
பூத் சிலிப் அனுப்பும் பா.ஜ.,: கோவை கலெக்டரிடம் புகார்
பூத் சிலிப் அனுப்பும் பா.ஜ.,: கோவை கலெக்டரிடம் புகார்
ADDED : ஏப் 13, 2024 11:35 PM
கோவை:தேர்தல் ஆணைய விதிமுறையை மீறி, வாக்காளர்களுக்கு ஆன்லைன் முறையில் பா.ஜ.,வினர் பூத் சிலிப் வழங்கி வருவதாக, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்தி குமாரிடம், மாநகர் மாவட்ட தி.மு.க., வக்கீல்கள் அணி அமைப்பாளர் அன்புச் செழியன் புகார் கூறியுள்ளார்.
அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை லோக்சபா தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்களின் மொபைல் போனுக்கு, பா.ஜ., சார்பில் 'ஆன்லைன் லிங்க்' அனுப்புகின்றனர்.
அதற்குள் நுழைந்தால், பிரதமர் மோடி, பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை படங்கள் மற்றும் தாமரை சின்னத்துடன் கூடிய, பூத் சிலிப் வருகிறது.
அதில், தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் 'க்யூஆர்' கோடு இருக்கிறது. அதை ஸ்கேன் செய்தால், ஓட்டுப்போட வேண்டிய பூத் விபரம் தெரிகிறது.
தேர்தல் ஆணையம் வசமுள்ள, வாக்காளர்களின் முழு தகவல்களும் திருடப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க., சார்பில் புகார் கூறப்பட்டிருக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

