/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., மகளிர் அணியினர் தீபம் ஏந்தி மவுன அஞ்சலி
/
பா.ஜ., மகளிர் அணியினர் தீபம் ஏந்தி மவுன அஞ்சலி
ADDED : ஆக 18, 2024 01:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:மேற்கு வங்கத்தில், தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து, மருத்துவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இறந்த பெண் பயிற்சி மருத்துவருக்கு, இரங்கல் தெரிவிக்கும் வகையில், கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., மகளிர் அணியினர், காந்திபுரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை தீபம் ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில், மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயஸ்ரீ மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்றனர்.

