/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமங்களுக்கு செல்லும் ரோட்டில் தடுப்பு தேவை
/
கிராமங்களுக்கு செல்லும் ரோட்டில் தடுப்பு தேவை
ADDED : மே 30, 2024 12:24 AM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, மயானம் வழியாக செல்லும் கிராமப்புற ரோட்டின் ஓரத்தில், தடுப்பு அமைக்க வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மயானம் வழியாக இம்மிடிபாளையம், தேவராடிபாளையம், கோதவாடி போன்ற கிராமங்களுக்கு செல்லும் ரோடு உள்ளது.
இந்த வழித்தடத்தில் நாள்தோறும் ஏராளமான மக்கள் செல்கின்றனர். இந்த வழியில், 'டாஸ்மாக்' மதுக்கடை உள்ளது.
இந்த வழியில், சிறிது துாரம் ரோட்டின் இருபுறமும் தாழ்வாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறிச்செல்கின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் இந்த வழியில் பைக்கில் செல்பவர்களில் சிலர் மது அருந்தி விட்டு, தாறுமாறாக செல்வதால், மற்ற வாகனங்களில் செல்வோர் சிரமப்படுகின்றனர். இதில், சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
மேலும், ரோட்டின் ஓரத்தில் உள்ள தாழ்வான பகுதியில், இரண்டு புறமும் விளைச்சல் நிலங்களாக இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி ரோட்டோரத்தில் தடுப்புகள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.