ADDED : ஏப் 02, 2024 11:51 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சூலக்கல் செல்லும் ரோட்டில் நீரோடை ஓரத்தில் தடுப்புகள் இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, சூலக்கலில் ஊராட்சி அலுவலகம் செல்லும் ரோட்டில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த ரோட்டின் வளைவான பகுதியில் நீரோடை உள்ளது.
இந்த நீரோடையின் ஓரத்தில் தடுப்புகள் இல்லாததால் வாகன ஓட்டுனர்கள், இந்த வளைவு பகுதியில் அச்சத்துடன் மெதுவாக சென்று வருகின்றனர். இப்பகுதியில், ரோட்டோரத்தில் மின் விளக்கு வசதியும் போதிய அளவு இல்லாததால், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்பவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
இந்த வழியில் பைக்கில் வேகமாக செல்லும் போது, வளைவில் கீழே விழ அதிக வாய்ப்புள்ளது. கோவில் திருவிழா காலங்களில் இப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, இந்த நீரோடை அருகே தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

