/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரியில் ரத்ததான விழிப்புணர்வு முகாம்
/
கல்லுாரியில் ரத்ததான விழிப்புணர்வு முகாம்
ADDED : மார் 14, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை பிச்சனுார் ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் சுவாமி விவேகானந்தா ரத்த மையம் சார்பில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
கல்லுாரி முதல்வர் மனோகரன் தலைமைவகித்து முகாமை துவக்கிவைத்தார்.
நிகழ்வில் ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து துறைத்தலைவர் மோகனப்பாண்டியன் விளக்கமளித்தார். இதில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட, 150 பேர் பங்கேற்று ஆர்வத்துடன் ரத்த தானம் அளித்தனர்.
முகாமை, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முத்துக்குமார், உதவி பேராசிரியர் ஸ்ரீகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.