/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேளாண் பல்கலையில் புத்தக திருவிழா
/
வேளாண் பல்கலையில் புத்தக திருவிழா
ADDED : மார் 05, 2025 10:56 PM
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் மாணவர்கள் நல மையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், நுாலகம் சார்பில், புத்தக திருவிழா நிகழ்வு நடந்தது. துணைவேந்தர் கீதாலட்சுமி நிகழ்வுகளை துவக்கிவைத்தார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக, வேளாண் சார்ந்த பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், கொள்குறி வினா விடைத்தொகுப்புகள் அடங்கிய நுால்கள், உழவியல், தோட்டக்கலை, தாவர அறிவியல், மற்றும் இயல் அறிவியல் பிரிவுகளில் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
இதில், 18க்கும் மேற்பட்ட புத்தக பதிவாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்கள் வேளாண், வேளாண் பொறியியல், வனவியல், வேளாண் கல்வி உள்ளிட்டவை சார்ந்த புத்தகங்ளை பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்திருந்தனர்.
துவக்கவிழா நிகழ்வில், டீன் மரகதம், பேராசிரியர் செல்லமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.