/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிக்கு முன்பதிவுகள் வரவேற்பு
/
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிக்கு முன்பதிவுகள் வரவேற்பு
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிக்கு முன்பதிவுகள் வரவேற்பு
பள்ளிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிக்கு முன்பதிவுகள் வரவேற்பு
ADDED : பிப் 24, 2025 12:51 AM
கோவை; மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு வரும், 26ம் தேதிக்குள் முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் நடக்கிறது. 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 'ஏ.வி.லட்சுமணன் செட்டியார் நினைவு கோப்பை', 14 வயதுக்குட்பட்டோருக்கு'ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்துார் மெட்ரோபாலிஸ் கோப்பை' போட்டியும் இடம்பெறுகிறது.
இதில், 12 வயதுக்குட்பட்டபிரிவு மாணவர்கள் கடந்த, 2012ம் ஆண்டு செப்., 1ம் தேதியன்று அல்லது அதன் பிறகும், 14 வயதுக்குட்பட்ட பிரிவு மாணவர்கள் கடந்த, 2010ம் ஆண்டு செப்., 1ம் தேதியன்று அல்லது அதன் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
போட்டிக்கான நுழைவு விண்ணப்பத்தில் பள்ளி முதல்வர் அல்லது தலைமையாசிரியர் கையொப்பம் இருக்க வேண்டும். மேலும், விளையாட்டு வீரரின் பிறப்பு சான்றிதழ் நகலில் பள்ளி முதல்வர் அல்லது தலைமையாசிரியர் கையொப்பம் இடம் பெற்றிருத்தல் அவசியம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 26ம் தேதி மதியம், 1:00 மணிக்குள், ஆவாரம்பாளையம் ரோடு, ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விபரங்களுக்கு, 80729 48889 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

