/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லோக்சபா தேர்தலில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் வேலை செய்யவில்லை: அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ஆதங்கம்

ADDED : ஆக 31, 2024 01:41 AM

அன்னுார்:''லோக்சபா தேர்தலில், பூத் கமிட்டி உறுப்பினர்கள் பலர் வேலை செய்யவில்லை, என அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் அருண்குமார் ஆதங்கத்துடன் பேசினார்.
அன்னுார் அருகே, கரியாம்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், ஆறு ஊராட்சிகளை சேர்ந்த கிளைச் செயலாளர்களிடம், உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில் தலைமை வகித்தார். கூட்டத்தில் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ.,வும், கோவை வடக்கு மாவட்ட செயலாளருமான அருண்குமார் பேசியதாவது:
பல மாவட்டங்களில், பல ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன. இங்கு முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் பழனிசாமி ஆகியோர் முயற்சியால் அத்திக்கடவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குட்டைகளில் நீர் நிரம்பி வருகிறது.
தற்போது தொழில் பூங்காவுக்காக 3,800 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்துவது கண்டனத்துக்குரியது. விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது.
கடந்த லோக்சபா தேர்தலில் இளைஞர்கள், இளம் பெண்கள் என பார்த்து, பார்த்து ஒரு ஓட்டு சாவடிக்கு 59 பேர் என நியமித்தோம். ஆனால் ஒரு சிலர் மட்டுமே வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்தனர். கமிட்டியில் இருந்த பலர் வேலை செய்யவில்லை. இவ்வாறு, அவர் பேசினார். கூட்டத்தில் ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் நாசர் உட்பட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.