/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு மாதமாக போர்வெல் நீர் வரவில்லை: பொதுமக்கள் புகார்
/
நான்கு மாதமாக போர்வெல் நீர் வரவில்லை: பொதுமக்கள் புகார்
நான்கு மாதமாக போர்வெல் நீர் வரவில்லை: பொதுமக்கள் புகார்
நான்கு மாதமாக போர்வெல் நீர் வரவில்லை: பொதுமக்கள் புகார்
ADDED : செப் 05, 2024 12:10 AM
அன்னுார் : போர்வெல் நீர் வராததால் மூன்று வீதி மக்கள் நான்கு மாதங்களாக தவிக்கின்றனர்.
அன்னுார் பேரூராட்சியில், ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு, ஒரு முறை, பவானி ஆற்று குடிநீர் வழங்கப்படுகிறது. தினமும் போர்வெல் நீர் பொது குழாய்களில் சப்ளை செய்யப்படுகிறது. இதில் அவிநாசி ரோட்டில் சி.எஸ்.ஐ., வீதி பகுதியில், 3 வீதிகளில் கடந்த சில மாதங்களாக போர்வெல் நீர் சப்ளை செய்யப்படவில்லை. இதுகுறித்து அப் பகுதி மக்கள், பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். அப்பகுதி வார்டு கவுன்சிலர் ரேஷ்மி சந்திரசேகர், பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் கூறுகையில்,அப்பகுதியில் கழிவுநீர் வடிகால் கட்டும் பணி நடந்தது. இதில் போர்வெல் நீர் குழாய் சேதமடைந்தது. புதிதாக குழாய் வாங்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் போர்வெல் நீர் சப்ளை செய்யப்படும், என்றார்.
இதையடுத்து கவுன்சிலர் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டார்.