/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ; சிறுமியின் தாயை மிரட்டியவர்கள் மீது வழக்கு
/
போக்சோ; சிறுமியின் தாயை மிரட்டியவர்கள் மீது வழக்கு
போக்சோ; சிறுமியின் தாயை மிரட்டியவர்கள் மீது வழக்கு
போக்சோ; சிறுமியின் தாயை மிரட்டியவர்கள் மீது வழக்கு
ADDED : செப் 05, 2024 11:32 PM
கோவை:போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை மிரட்டியதாக கைதானவரின் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கணவரை இழந்த கூலி தொழிலாளி தனது மூன்று பெண் குழந்தைகளுடன் கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரின் 15 வயது மகளுக்கு கடந்த மார்ச் மாதம், மளிகைக்கடை வைத்துள்ள பாலமுருகன், 48 பாலியல் துன்புறுத்தல் அளித்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கடந்த ஜூலை 22ம் தேதி பாலமுருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கைதான பாலமுருகனின் தாய், மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் வழக்கில் மாற்றி சாட்சியம் அளிக்குமாறு மிரட்டியுள்ளனர். மேலும் 3 ஆண்டுகளுக்கு பின் சிறுமியை பாலமுருகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், காட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற போது, மிரட்டல் புகார் என்பதால், கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்தனர். அங்கு சென்ற போது, மீண்டும் காட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷன் செல்லுமாறு அலைகழித்துள்ளனர்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் சென்றது. கமிஷனர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் பேசினார். பின்னர், கவுண்டம்பாளையம் மற்றும் காட்டூர் அனைத்து மகளிர் போலீசார் பாதிக்கப்பட்டோரிடம் பேசி, பாலமுருகனின் தாய் சின்னம்மாள், 68, மனைவி பானுபிரியா, 43, சகோதரி பழனியம்மாள், 45 ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.