/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை தடை செய்யணும்'
/
'சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை தடை செய்யணும்'
'சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை தடை செய்யணும்'
'சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவதை தடை செய்யணும்'
ADDED : ஆக 18, 2024 10:54 PM
மேட்டுப்பாளையம்:இருசக்கர வாகனங்களை சிறுவர்கள் ஓட்டுவதை, கட்டுப்படுத்த போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின், 36வது பொதுக்குழு கூட்டம், அன்னபூர்ணா கலையரங்கில் நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மேட்டுப்பாளையம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு, அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். நகரில் நடைபெறும், போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். பிளாஸ்டிக் உபயோகங்களையும், விற்பனையையும் முற்றிலும் தடை செய்ய வேண்டும்.
கோவை -- மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, ஞாயிற்றுக்கிழமையும் இயக்க வேண்டும்.
நகரில் இரு சக்கர வாகனங்களை, சிறுவர்கள் ஓட்டுவதை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டின் கட்டமைப்பு விவரத்தை, விளம்பர பலகையாக மக்கள் அறியும் வண்ணம் வைக்க வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, கூட்டத்துக்கு தலைவர் சாந்தமூர்த்தி தலைமை வைத்தார். 2024 - 26ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

